டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ்!

கைரன் பொல்லார்டுக்காக மும்பை இந்தியன்ஸ் பதிவிட்ட பதிவு குறித்து...
pollard and Mumbai indians post
பொல்லார்டு, மும்பை இந்தியன்ஸின் பதிவு. படங்கள்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ், எம்ஐ நியூயார்க்.
Published on
Updated on
1 min read

கைரன் பொல்லார்டுக்காக மும்பை இந்தியன்ஸ் பதிவிட்ட பதிவு சிஎஸ்கே ரசிகளை சீண்டும் விதமாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சேலஞ்சர் போட்டியில் டெக்ஸஸ் சூப்பர் கிங்ஸ் (டிஎஸ்கே) அணியும் எம்ஐ நியூயார்க் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 166/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டு பிளெஸ்ஸி 59, அகில் ஹொசைன் 55 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய எம்ஐ நியூயார்க் அணி 19 ஓவரில் 172/3 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த அணியில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 52, மோனக் படேல் 49, கைரன் பொல்லார்டு 47 ரன்கள் எடுத்தார்கள்.

இதில் கைரன் பொல்லார்டு 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன் மூலம் எம்ஐ நியூயார்க் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Pollard won the Man of the Match award.
ஆட்ட நாயகன் விருது வென்ற பொல்லார்டு.படம்: எக்ஸ் / எம்ஐ நியூயார்க்

மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவை சீண்டும் விதமாக கைரன் பொல்லார்டுக்காக ஒரு பதிவிட்டுள்ளது. அதில் பொல்லார்டு மற்ற நிற அணிகளுடன் ஜாலியாக இருப்பது போலவும் மஞ்சள் நிற அணியுடன் மட்டும் கோபமாக இருப்பது போலவும் பதிவிட்டுள்ளது.

பொல்லார்டு சிஎஸ்கே அணியுடன் நன்றாக விளையாடி இருக்கிறார். அதனால், மும்பை இந்தியன்ஸ் இந்தப் பதிவை பதிவிட்டுள்ளது.

டிஎஸ்ஜே அணியை சிஎஸ்கே அணியும் எம்ஐ நியூயார்க் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியும் வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

The post Mumbai Indians posted for Kieron Pollard is intended to irritate CSK fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com