இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் திலக் வர்மா விளையாடவுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியங்களால் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்காக அண்மையில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹேம்ப்ஷைர் அணிக்காக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான திலக் வர்மா விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
22 வயதாகும் ஹைதராபாதைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான திலக் வர்மா, இதுவரை இந்திய அணிக்காக 25 டி20 போட்டிகள் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் 749 ரன்கள் மற்றும் 68 ரன்கள் முறையே எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் திலக் வர்மா விளையாடவுள்ளது குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்ததாவது: ஹைதராபாதைச் சேர்ந்த சர்வதேச வீரரான என். தாக்குர் திலக் வர்மா ஹேம்ப்ஷைர் கவுன்ட்டி அணிக்கு விளையாடுவதற்காக அந்த அணி நிர்வாகத்தால் அணுகப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஹேம்ப்ஷைர் கவுன்ட்டி அணிக்காக அவர் சிறப்பாக விளையாட எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 1,204 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 50.16 ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 121 ஆகவும் உள்ளது. முதல் தர போட்டிகளில் அவர் 5 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை ஸ்ரீலீலா - திலக் வர்மா காதலா?

106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த திலக் வர்மா..! நடப்பு சீசனில் நீண்ட தூரம்!

மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்: க்ருணால் பாண்டியா

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



