சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3-ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!

ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்றார் ஷுப்மன் கில்.

News image
ஷுப்மன் கில்- படம்: எக்ஸ் / ஐசிசி
Updated On :12 மார்ச் 2025, 1:27 pm

DIN

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது.

அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் ஷுப்மன் கில், நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்நிலையில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஷுப்மன் கில், பெண்கள் பிரிவில் அலானா கிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த ஐசிசி விருது 3ஆவது முறையாக ஷுப்மன் கில் பெறுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதத்தில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷுப்மன் கில் 101.50 சரசாரியுடன் 406 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 87 ரன்கள், 60 ரன்கள் மற்றும் 112 ரன்கள் முறையே எடுத்தார்.

இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. ஷுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.