மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி20 சாம்பியன்-ஷிப் தொடர்: பாபர் அசாம், நசீம் ஷா விலகல்!

தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து விலகினர் பாபர் அசாம், நசீம் ஷா.

News image
நசீம் ஷாவுடன் பாபர் அசாம்..
Updated On :13 மார்ச் 2025, 12:17 pm

DIN

தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நசீம் ஷா இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்பட்டது. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடத்தப்பட்டன. மைதான பராமரிப்புகளுக்காக ரூ.1800 கோடி செலவு செய்த பாகிஸ்தான் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.

இதனால், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதில், முன்னாள் கேப்டன் பாபர் அசாம், தற்போதைய கேப்டன் முகமது ரிஸ்வான், வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா உள்பட அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அந்த அணியை அறிவிக்கும் போது மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் இந்த வீரர்கள் ஃபைசலாபாத்தில் தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் விளையாடுவார்கள் என்று சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த நிலையில், வரவிருக்கும் போட்டிகளைக் கருத்தில் கொண்டு, பாபர் அசாம், நசீம் ஷா இருவரும் தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து விலகியுள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.

இவர்கள் போட்டியில் இருந்து விலகியிருப்பது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் பிஎஸ்எல் போட்டிக்காகத்தான் இருக்கும் என்று மூத்த வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாபர் அசாம் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் தரப் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.