பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை!

மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை.

சென்னை சேப்பாக்கம் திடல். (கோப்புப்படம்) - ANI

Published On :17 மார்ச் 2025, 4:01 pm IST

ஐபிஎல் 2025 தொடரின் சென்னை - மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 19 அன்று தொடங்குகிறது.

ஐபிஎல் 2025 தொடர் வருகின்ற மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு ராயம் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னையில் மார்ச் 23-ல் நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், வரும் மார்ச் 19 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் விற்பனை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விற்பனைக்காக டிக்கெட்டின் விலை ரூ. 1,700 முதல் ரூ. 7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவார் என்ற மனநிலை மக்களிடையே நிலவுவதால், டிக்கெட்டானது சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்து விடும் எனக் கூறப்படுகிறது.

சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.