இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஐபிஎல் 2026: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர்கள் ஆதிக்கம்; ஹர்பஜன் சிங் பாராட்டு!

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.

CSK players praised Anshul Kamboj for taking a wicket.

விக்கெட் வீழ்த்திய அன்ஷுல் கம்போஜை பாராட்டிய சிஎஸ்கே வீரர்கள் - படம் | AP

Published On :22 ஏப்ரல் 2026, 6:23 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பிக்கான போட்டியில் முதல் ஐந்து இடங்களில் உள்ள வீரர்களில் நான்கு பேர் இந்திய பந்துவீச்சாளர்கள்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ், பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அன்ஷுல் கம்போஜ், 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இரண்டாவது இடத்தில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஈசன் மலிங்கா (12 விக்கெட்டுகள்) உள்ளார். இந்திய வீரர்களான பிரசித் கிருஷ்ணா (12 விக்கெட்டுகள்), பிரின்ஸ் யாதவ் (11 விக்கெட்டுகள்) மற்றும் புவனேஷ்வர் குமார் (10 விக்கெட்டுகள்) மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே உள்ளனர்.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: போட்டி எவ்வாறு வளர்ச்சியடைகிறதோ அதற்கேற்ப தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதைத் தவிர இந்திய பந்துவீச்சாளர்களுக்கு வேறு தெரிவு இல்லை. பந்துவீச்சு யுக்திகளில் மாற்றங்களைக் கொண்டுவரவில்லையென்றால், அவர்களது ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்கப்படும். பேட்டர்கள் புதிது, புதிதாக ஷாட்டுகளை விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு சவாலளிக்கும் விதமாக பந்துவீச பந்துவீச்சாளர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் நான்கு பேர் இந்திய வீரர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அன்ஷுல் கம்போஜ் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக அன்ஷுல் கம்போஜ் மிகவும் அபாரமாக பந்துவீசினார். டெத் ஓவர்களில் கிளாசனுக்கு எதிராக அவர் அற்புதமாக பந்துவீசினார் என்றார்.

Summary

Former Indian cricketer Harbhajan Singh has praised Indian players for dominating the ongoing IPL season by taking the highest number of wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.