ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்; மே.இ.தீவுகளை வீழ்த்தி அசத்தல்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image

படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :6 ஆகஸ்ட் 2026, 6:20 pm IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தானைக் காட்டிலும் 43 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், பாகிஸ்தான் அணிக்கு 75 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, 23.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 160* ரன்கள் எடுத்த அப்துல்லா சஃபீக், இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதேபோல, முதல் இன்னிங்ஸில் 88 ரன்கள் எடுத்து அசத்திய கேப்டன் பாபர் அசாம் 24 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அப்துல்லா சஃபீக் ஆட்ட நாயகனாகவும், ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் பாபர் அசாம் இருவரும் தொடர் நாயகன்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. மேலும், வெளிநாடுகளில் தொடர்ச்சியாக சந்தித்து வந்த தோல்விகளுக்கும் பாகிஸ்தான் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வெளிநாடுகளில் நடைபெற்ற கடந்த 8 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், தற்போது அந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Summary

The Pakistan team achieved a magnificent victory by eight wickets in the second Test match against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.