6 விக்கெட்டுகள் இழப்பு: இலங்கையின் தோல்வியை தள்ளிப்போட்ட பசிந்து சூரியபந்த்ரா!

இந்தியா - இலங்கை மோதிய இரண்டாவது டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம் குறித்து...

Sri Lanka's Pasindu Sooriyabandara celebrates his fifty runs during day three of the second cricket test match between Sri Lanka and India in Colombo, Sri Lanka, Tuesday, Aug. 25, 2026. (AP Photo/Eranga Jayawardena)

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் பசிந்து சூரியபந்த்ரா. - படம்: ஏபி

Published On :26 ஆகஸ்ட் 2026, 6:06 pm IST

இந்தியா - இலங்கை மோதிய இரண்டாவது டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்து 16 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

கொழும்பில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 503/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதில் துருவ் ஜுரெல், தேவ்தத் படிக்கல் சதம் அடித்து அசத்தினார்கள்.

அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவைவிட 200 ரன்கள் குறைவாக இருப்பதால் இலங்கை அணி ஃபாலோ ஆன் விதியின்படி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட ஷுப்மன் கில் பணித்தார்.

இந்த நான்காம் நாளில் இலங்கை அணி 72.4 ஓவர்களில் 229/6 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக பசிந்து சூரியபந்த்ரா 92 ரன்கள் எடுத்தும் கமிந்து மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தும் தோல்வியை தள்ளிப் போட உதவினார்கள்.

இந்தியா சார்பில் மானவ் சுதர் இரண்டு விக்கெட்டுகளும் ஜடேஜா, பிரசித், சிராஜ், சரன்ஷ் ஜெயின் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தார்கள்.

முதல் டெஸ்ட்டில் வென்ற இந்திய அணி இதிலும் வென்றால் தொடரை 2-0 என முழுமையாக வெல்லும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

Summary

Colombo Test: Day 4: Stumps - 6 Wickets Down: Pasindu Sooriyabandara Delays Sri Lanka's Defeat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.