

பிபிஎல்: ஆஷஸ் வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல் (பிக் பேஷ் லீக்) தொடரில் விளையாடுகிறார்.
சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் இந்த சீசனில் முதல்முறையாக பிபிஎல் தொடரில் களமிறங்குகிறார்.
டாஸ் வென்ற ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித்தும் பாபர் அசாமும் களமிறங்கினார்கள்.
ஸ்மித் 19, பாபர் அசாம் 9 ரன்களுடன் ஐந்து ஓவர்கள் முடிவில் 32/0 ரன்கள் இருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் கடைசியாக விளையாடிய ஐந்து பிபிஎல் போட்டிகளில் 52*, 121*, 61, 125*, 101 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.