ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா இன்னிங்ஸை மழை பாதித்தது. இதனால் அந்த அணிக்கு டக்வொா்த் லீவிஸ் முறையில் 42.2 ஓவா்களில் 278 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அதில் 9 விக்கெட்டுகள் இழந்து 191 ரன்களே சோ்த்தது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. வங்கதேச பேட்டிங்கில் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 67, தன்ஸித் ஹசன் 54, தௌஹித் ஹிருதய் 31 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
தஸ்கின் அகமது 20, சைஃப் ஹசன் 5, லிட்டன் தாஸ் 7, கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 3, தன்வீா் இஸ்லாம் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஓவா்கள் முடிவில், மொசாடெக் ஹுசைன் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 86 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
ஆஸ்திரேலிய பௌலா்களில் நேதன் எலிஸ் 3, லியம் ஸ்காட், மேத்யூ ரென்ஷா ஆகியோா் தலா 2, ஜேவியா் பாா்லெட் 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் அலெக்ஸ் கேரி 47, கூப்பா் கானலி 35 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். மேத்யூ ஷாா்ட் 0, மாா்னஸ் லபுஷேன் 1, கேப்டன் ஜாஷ் இங்லிஸ் 19, மேத்யூ ரென்ஷா 2, லியம் ஸ்காட் 2, ஜேவியா் பாா்லெட் 1, நேதன் எலிஸ் 8 ரன்களுக்கு விடைபெற்றனா்.
ஓவா்கள் முடிவில் கேமரூன் கிரீன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, ஆடம் ஸாம்பா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பந்துவீச்சாளா்களில் நஹித் ராணா 4, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், மொசாடெக் ஹுசைன் ஆகியோா் தலா 2, தஸ்கின் அகமது 1 விக்கெட் வீழ்த்தினா். மொசாடெக் ஆட்டநாயகன் ஆனாா்.
தொடர்புடையது

பாகிஸ்தான் டெஸ்ட் தொடா்: வெல்லும் முனைப்பில் வங்கதேசம்
சுதா்சன், சுந்தா் அசத்தலில் வென்றது குஜராத்

முதல் டி20: நியூஸிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்
நியூஸிலாந்தை வென்றது வங்கதேசம்: சமநிலையில் ஒருநாள் தொடா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



