தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

யு19 இந்திய அணியில் இணைந்த ராகுல் திராவிட்டின் இளைய மகன்!

இந்தியாவின் யு19 கிரிக்கெட் அணியில் இணைந்த ராகுல் திராவிட் மகன் குறித்து...

Dravid's younger son.

திராவிட்டின் இளைய மகன். - படம்: இன்ஸ்டா / சிக்ஸ் கிரிக்கெட் கம்யூனிட்டி.

Published On :

ராகுல் திராவிட்டின் இளைய மகன் அன்வே திராவிட் இந்தியாவின் யு19 அணியில் இணைந்துள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவிருக்கின்றன.

இந்த இந்திய அணியில் 17 வயதான அன்வே திராவிட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டிகள் வரும் ஜூலை 4ல் தொடங்கி ஜூலை 20ஆம் தேதி முடிவடைகிறது.

அன்வே திராவிட் கர்நாடக யு19 அணியை வழிநடத்தி விநோ மன்கட் டிராபி தொடரில் காலிறுதி வரைக்கும் வந்தது. இதில் 6 போட்டிகளில் 220 ரன்கள் குவித்து கவனம் பெற்றார். இவர் முன்னதாக யு-19 பி அணியிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யு19 இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

முன்னதாக, டிராவிட்டின் மூத்த மகன் சமித் திராவிட் 2024ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய யு19 அணியில் இடம்பிடித்தார். காயம் காரணமாக இந்த வாய்ப்பை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடருக்கான யு19 அணி: சாகர் விர்க், லக்‌ஷயா ராய்சந்தானி (துணைக் கேப்டன்), யஷ்பரந்தன் சிங் சௌஹான் (கேப்டன்), வினீத் விகே, அர்ஜுன் ராஜ்புட், குஷாக்ரா ஓஜா, ரஜத் பாகேல் (கீப்பர்), அன்வே திராவிட் (கீப்பர்), அன்மோல்ஜித் சிங், உட்கரி யாஷ்வீர் கௌட், ரோஹித் அனில் யாதவ், ஷாவின் வி, காவ்யா பரேஷ் படேல், மோஹித் உல்வா, இஷான் சூத்.

டெஸ்ட் போட்டிக்கான யு19 இந்திய அணி: சாகர் விர்க், லக்‌ஷயா ராய்சந்தானி (துணைக் கேப்டன்), யஷ்பரந்தன் சிங் சௌஹான் (கேப்டன்), படேல் குஷ், மன; சௌஹான், மானவ் கிருஷ்ணா (கீப்பர்), குஷாக்ரா ஓஜா, ஆர்யன் சந்தேஷ் சக்பால் (கீப்பர்), ஹேம்சுதேசன், பிகே கிஷோர், ரோஹித் அனில் யாதவ், காவ்யா பரேஷ் படேல், பிரியான்ஷ் சிங், பிரணவ் ராகவேந்திரா, சிகுருபடி வெங்கடா.

Summary

Rahul Dravid's son Anvay included in India U-19 squad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.