டிரா செய்யாமல் இந்திய அணி கடைசிப் பந்து வரை போராடியிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டிரா செய்யாமல் இந்திய அணி கடைசிப் பந்து வரை போராடியிருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Indian team players

இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ

Updated On :

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டிரா செய்யாமல் இந்திய அணி கடைசிப் பந்து வரை போராடியிருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் கடைசி நாளில் 15 ஓவர்கள் மீதமிருந்தும் போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் 50 ஓவர்களுக்கும் மேலாக பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்தனர். ஒரு மணி நேர ஆட்டம் மீதமிருந்தும் போட்டியை டிராவில் முடித்துக் கொண்டதற்கான விளக்கத்தையும் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டிரா செய்யாமல் இந்திய அணி கடைசிப் பந்து வரை போராடியிருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஹர்பஜன் சிங் (கோப்புப் படம்)

ஹர்பஜன் சிங் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நானாக இருந்திருந்தால், கடைசி நாளின் மீதமுள்ள 15 ஓவர்களையும் வீசியிருப்பேன். கடைசிப் பந்து வரை போராட வேண்டும் என்பதே அனில் கும்ப்ளேவின் அணுகுமுறை. சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் கடைசி நாளின் கடைசி இரண்டு ஓவர்களில் மைக்கேல் கிளார்க் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியது எனக்கு ஞாபகமிருக்கிறது. கடைசி நாளில் மீதமிருந்த 15 ஓவர்களில் என்ன நடந்திருக்கும் என்பதை யாராலும் ஒருபோதும் கூற முடியாது என்றார்.

முன்னதாக, கடைசி 15 ஓவர்களை இந்திய அணி வீசியிருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian cricketer Harbhajan Singh has stated that the Indian team should have fought until the very last ball in the first Test against New Zealand, rather than settling for a draw.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.