திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

32 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழ்நாடு கேப்டன் பாபா அபரஜித்!

தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டன் பாபா அபரஜித் ஓய்வை அறிவித்துள்ளது குறித்து...

Baba Aparajith with the major trophies he has won

தான் வென்ற முக்கியமான கோப்பைகளுடன் பாபா அபரஜித் - படங்கள்: இன்ஸ்டா / பாபா அபரஜித்

Updated On :

தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டன் பாபா அபரஜித் (32 வயது) தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற கனவு நனவாகாத நிலையில், யு19 உலகக் கோப்பை, இந்தியா ஏ அணிகளில் விளையாடி அசத்தியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பாபா அபரஜித் தனது 15 ஆண்டுகால தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து வீரராக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

102 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ள இவர் 5,199 ரன்கள், மற்றும் 75 விக்கெட்டுகளும், 114 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 4,278 ரன்கள் மற்றும் 83 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

கடந்த 2024-25 சீசனில் தமிழ்நாடு அணியில் இருந்து கேரள அணிக்கு மாறினார். தற்போது வர்ணனையில் ஈடுபட்டு வரும் இவர் பயிற்சியாளராகவும் முனைப்பு காட்டி வருகிறார்.

மொத்தமாக 20 சதங்களை அடித்துள்ள பாபா அபரஜித் விஜய் ஹசாரேவில் 2017-18, சையத் முஷ்டக் அலி தொடரில் 2020-21, 2021-22 தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியில் இருந்துள்ளார்.

முதல்முறையாக 2012ல் நடைபெற்ற யு19 உலகக் கோப்பையில் 171 ரன்கள், 5 விக்கெட்டுகள் எடுத்து கவனம் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான காலிறுதி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.

சிறப்பாக விளையாடியதால் 2015ல் இந்தியா ஏ அணியில் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவரால் இந்திய சீனியர் அணியில் இடம்பெறாமல் சென்றது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, ஆர்பிஎஸ் அணிகளில் இருந்துள்ளார். ஆனால், போதுமான வாய்ப்புகள் இல்லாமல் அதில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் சென்றார்.

தற்போது அபரஜித் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இளம் தமிழக வீரர்களான விமல் குமார், பிரதோஷ் ரஞ்சன் பாலுக்கு தனியாக பயிற்சி அளித்து வருகிறார்.

பிசிசிஐ லெவல் -2 பயிற்சியாளருக்கான சான்றிதழையும் பெற்றுள்ள அபரஜித் டிஎன்பில் தொடரில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு உதவி பயிற்சியாளராக இருக்கிறார்.

Summary

Former Tamil Nadu captain Baba Aparajith retires from professional cricket

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.