2-வது டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் மாற்றமில்லை!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

படம் | பிசிசிஐ
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று (அக்டோபர் 9) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேத்யூ ஃபோர்ட்டுக்குப் பதிலாக குடகேஷ் மோட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
Summary
The West Indies team won the toss and elected to bowl in the second T20 match against India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


