பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அறிமுக டெஸ்ட்டில் டி20 ஆடிய பாகிஸ்தான் வீரர்..! இங்கிலாந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் ரஸாவுல்லா!

அறிமுக டெஸ்ட் போட்டியில் அசத்திய பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் ரஸாவுல்லா மஷ்வானி குறித்து...

Pakistan's Razaullah walks after being stumped by England's Jordan Cox on day three of the third cricket Test between England and Pakistan in Birmingham, England, Friday, Sept. 11, 2026. (Mike Egerton/PA via AP)

ஆட்டமிழந்து வெளியேறிய ரஸாவுல்லா - படம்: ஏபி

Published On :

டெஸ்ட்டில் அறிமுக போட்டியில் அசத்திய பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் ரஸாவுல்லா மஷ்வானிக்கு (21 வயது) இங்கிலாந்து ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினார்கள்.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் பரபரப்பாக முடிந்தது. இரண்டாம் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி 449 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து 453 ரன்கள் குவித்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபாலோ ஆன் ஆனதால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 318க்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு களமிறங்கிய ரஸாவுல்லா அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவர் 4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் பேட்டிங்கிலும் மிரட்டியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது பேட்டிங்கிற்கு இங்கிலாந்து ரசிகர்களே எழுந்து நின்று கைதட்டியது சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஏற்கெனவே தொடரை 2-0 என இங்கிலாந்து வென்றுள்ளது. பாகிஸ்தான் பந்துவீச்சிலும் கம்பேக் அளிக்கும் என இந்தப் போட்டி சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Razaullah Mashwani a Pakistan Debutant Receives Standing Ovation From English Crowd After 81-Run Knock

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER