இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை: சிஎஸ்கேவுக்கு வாழ்த்து கூறியுள்ள ரெய்னா

அங்கு இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. எனினும் என்னுடைய எல்லா வாழ்த்துகளும் ...

News image
படம் - twitter.com/ImRaina
Updated On :19 செப்டம்பர் 2020, 12:07 pm

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினா்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். மேலும், சொந்தக் காரணங்களுக்காக மற்றொரு சிஎஸ்கே வீரரான ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் ரெய்னா தெரிவித்ததாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகள். நான் அங்கு இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. எனினும் என்னுடைய எல்லா வாழ்த்துகளும் உங்களிடம் உள்ளன. நல்ல உணர்வுகளை உங்களுக்கு அனுப்புகிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.