இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இஷாந்த் காயம்: பஞ்சாப்புடனான மோதலில் களமிறங்குவாரா?

​தில்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், முதல் ஆட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

News image
பயிற்சியின்போது தில்லி வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்
Updated On :20 செப்டம்பர் 2020, 11:31 am

DIN


தில்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், முதல் ஆட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தில்லியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தில்லி அணி நிர்வாகி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:

"நேற்று (சனிக்கிழமை) பயிற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு அவரது காயம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்றவாறு முடிவு எடுக்கப்படும். இந்த விஷயத்தில் எங்களது மருத்துவக் குழுதான் இறுதி முடிவெடுக்கும்."

இதனால், இன்றைய ஆட்டத்தில் இஷாந்த் சர்மா பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.