இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாடுகிறார் ஸ்டீவ் ஸ்மித்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் நான் விளையாடவில்லை. துபையில்...

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 12:08 pm

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது சிஎஸ்கே. ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித், இங்கிலாந்தில் பயிற்சியின்போது ஹெல்மெட்டில் பந்து பட்டதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடவில்லை. இதனால் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் சிஎஸ்கேவுக்கு எதிராகத் தான் விளையாடவுள்ளதாக ஸ்மித் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் நான் விளையாடவில்லை. துபையில் கடந்த சில நாள்களாக நல்ல ஓய்வு கிடைத்தது. நேற்று ஓட்டப்பயிற்சி எடுத்தேன். இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டேன். நாளை விளையாடுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது. எங்கள் அணி வீரர்கள் கடந்த ஒரு மாதமாக நல்லவிதமாகப் பயிற்சி எடுத்துள்ளார்கள். எங்கள் அணி இப்போது மிகவும் வலுவாக உள்ளது. சென்னை, மும்பை அணிகள் விளையாடியதைப் பார்த்தேன். சிஎஸ்கே மிக நன்றாக விளையாடினார்கள். அவர்களுக்கு எதிராக நாங்கள் நன்கு விளையாடி வெற்றி பெறுவோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.