காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கடைசி 5 ஓவர்களில் 78 ரன்கள்: டி வில்லியர்ஸ், துபே அதிரடி பினிஷிங்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 செப்டம்பர் 2020, 3:53 pm

DIN


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 10-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் நல்ல தொடக்கம் தந்தனர்.

Story image

பின்ச் சரியான டைமிங்கில் விளையாடாவிட்டாலும், அதன்பிறகு ஆட்டத்தை துரிதப்படுத்தினார். படிக்கல் நல்ல ஒத்துழைப்பு தந்தார்.

Story image

இதன்மூலம், பெங்களூரு அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பின்ச் 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

Story image

ஆனால், அரைசதம் அடித்த கையோடு 52 ரன்களுக்கு போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி ரன் குவிக்கத் தடுமாறினார். இதனால், இடையில் 3 ஓவர்களில் 1 பவுண்டரிகூட கிடைக்கவில்லை. இதனால், ரன் ரேட் குறைந்தது. கடைசியில் அவர் ஆட்டமும் இழந்தார். 11 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்தார் கோலி.

Story image

இதையடுத்து, படிக்கல்லுடன் டி வில்லியர்ஸ் இணைந்தார். டி வில்லியர்ஸ் வந்தவுடன் படிக்கல்லும் அதிரடிக்கு மாறினார். பேட்டின்சன் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்த அவர் அரைசதத்தை நெருங்கினார்.

Story image

போலார்ட் ஓவரில் பவுண்டரி அடித்த அவர் அரைசதத்தைக் கடந்தார். இருவரும் அதிரடி காட்ட ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் ரன் கிடைத்து வந்தது.

Story image

17-வது ஓவரை ரோஹித் சர்மா பூம்ராவிடம் கொடுத்தும் பலனில்லை. 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடிக்க அந்த ஓவரிலும் 18 ரன்கள் கிடைத்தன. இந்த நிலையில், படிக்கல் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

எனினும், டி வில்லியர்ஸ் பினிஷிங் பொறுப்பை ஏற்று தொடர்ந்து, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். 19-வது ஓவரை பூம்ரா வீச அதிலும் அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 1 பவுண்டரியும் 1 சிக்ஸரும் அடித்தார். இதன்மூலம், 23-வது பந்தில் தனது அரைசத்தையும் எட்டினார் டி வில்லியர்ஸ்.

கடைசி ஓவரில் துபே ஸ்டிரைக்கில் இருக்க பேட்டின்சன் ஓவர் வீசினார். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை. அடுத்த 2 பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் துபே. அடுத்த 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைக்க, கடைசி பந்தை மீண்டும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் துபே. 

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் 55 ரன்களுடனும், துபே 10 பந்துகளில் 27 ரன்களுடனும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை அணித் தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுகளும், சஹார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.