காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியிருக்கும் பிரபல அணிகள்!

பிரபல அணிகளாகக் கருதப்படும் கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய அணிகள்...

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 5:35 am

DIN

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2- ம் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வென்றது.

ஷாா்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப், 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வென்றது.

ஆரம்பத்தில் ரன் எடுக்கத் தடுமாறினாலும் பிறகு ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து, 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் தெவாதியா, தனது அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் தில்லி, ராஜஸ்தான் ஆகிய அணிகள் மட்டுமே இரு வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஹைதராபாத் தவிர மற்ற எல்லா அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்றுள்ளன. பிரபல அணிகளாகக் கருதப்படும் கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய அணிகள் புள்ளிகள் பட்டியலில் கடைசி 4 இடங்களைப் பிடித்துள்ளன. 

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 தில்லி 2 2 0 4 +1.100
 ராஜஸ்தான் 2 2 0 4 +0.615
 பஞ்சாப்  3 1 2 2 +1.498
 மும்பை 2 1 1 2 +0.993
 கொல்கத்தா  2 1 1 2 -0.767
 சென்னை 3 1 2 2 -0.840
 பெங்களூர் 2 1 1 2 -2.175
 ஹைதராபாத்  2 0 2 0 -0.730

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.