அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னை அணியில் மீண்டும் மொயீன் அலி: ஹைதராபாத் பேட்டிங் தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2021, 1:35 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனில் தில்லியில் நடைபெறும் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

சென்னையில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மீண்டும் மொயீன் அலி மற்றும் லுங்கி என்கிடி சேர்க்கப்பட்டுள்ளனர். டுவைன் பிராவோ மற்றும் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்திலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அபிஷேக் சர்மா மற்றும் விராட் சிங் ஆகியோருக்குப் பதில் சந்தீப் சர்மா மற்றும் மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.