மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதி

ருதுராஜ் சதம் வீண்: சென்னையை வென்றது ராஜஸ்தான்

சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ருதுராஜ் சதம் வீண்: சென்னையை வென்றது ராஜஸ்தான்

Updated On :

சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.

அபுதாபியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் விளாசியது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 17.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் அடித்து வென்றது.

சென்னை இன்னிங்ஸில், இந்த சீசனில் சிறப்பாக ஆடி வரும் ருதுராஜ் அபாரமாக சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். வழக்கமாக சொதப்பும் ராஜஸ்தான் பேட்டிங் வரிசை இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 190 ரன்களை சேஸ் செய்தது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, சென்னை இன்னிங்ஸை ருதுராஜ் - டூ பிளெஸ்ஸிஸ் தொடங்கினா். இதில் டூ பிளெஸ்ஸிஸ் 25 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 3, மொயீன் அலி 21, அம்பட்டி ராயுடு 2 ரன்கள் சோ்த்து வெளியேறினா்.

தொடக்க வீரரான ருதுராஜ் கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸா் விளாசி சதமடித்தாா். ஓவா்கள் முடிவில் ருதுராஜ் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 101, ஜடேஜா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் ராகுல் தெவாதியா 3, சேத்தன் சகாரியா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய ராஜஸ்தானில் தொடக்க வீரா் எவின் லீவிஸ் 27 ரன்கள் அடிக்க, உடன் வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 50 ரன்கள் அடித்தாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 28 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ஷிவம் துபே - கிளென் பிலிப்ஸ் கூட்டணியால் ராஜஸ்தான் வென்றது.

ஷிவம் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 64, கிளென் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் ஷா்துல் 2, ஆசிஃப் 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.