பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஐபிஎல் 2021: ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்து வீச்சாளர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

News image
Updated On :14 அக்டோபர் 2021, 11:58 am

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி வீரரான சஹால், அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. பிறகு இந்தியாவில் ஐபிஎல் 2021 போட்டி தொடங்கியது. எனினும் பாதி போட்டி முடிவடைந்த நிலையில் சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் 2021 போட்டி நடைபெற்றபோது சுமாராகப் பந்துவீசிய சஹால், ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இறுதிச்சுற்றில் கேகேஆர் அணியின் நரைன் மேலும் 3 விக்கெட்டுகள் எடுத்தால் சஹாலுக்கு இணையாக விக்கெட்டுகள் எடுத்த வீரர் ஆவார். 

ஐபிஎல் 2021: ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் (இறுதிச்சுற்றுக்கு முன்பு)

14 - சஹால் 
11 - நரைன் 
11 - வருண் சக்ரவர்த்தி 
9 - அக்‌ஷர் படேல்
8 - ரஷித் கான், ரவி பிஸ்னோய் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.