/

டூ பிளஸ்ஸி அதிரடி: லக்னெள அணிக்கு 182 ரன்கள் இலக்கு

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

News image
பந்தை எதிர்கொள்ளும் மேக்ஸ்வெல்
Updated On :19 ஏப்ரல் 2022, 4:26 pm

DIN

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் 31வது ஆட்டம் மும்பை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அனுஜ் ராவத், டூ பிளஸ்ஸி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் சமீராவின் பந்தில் 4 ரன்களிலேயே ராவத் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த கோலியும் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார். 

அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ரன் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 23 ரன்களும், ஷபாஸ் அகமது 26 ரன்களும் எடுத்தனர். எனினும் மறுபுறத்தில் அதிரடியாக ஆடிய டூ பெளஸ்ஸி 64 பந்துகளில் 96 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். 

டூ பிளஸ்ஸி 

டூ பிளஸ்ஸி 

இதன் மூலம் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.