கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும்: மேத்யூ ஹேடன்

ஐபிஎல் போட்டியை வெல்லக்கூடிய அளவுக்கு சிஎஸ்கே வலுவான அணியாக உள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2022, 11:20 am

DIN

ஐபிஎல் 2022 போட்டியை சிஎஸ்கே அணி வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்துள்ளார். இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 4 முறையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது. 

இந்நிலையில் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் ஒரு பேட்டியில் சிஎஸ்கே அணி பற்றி கூறியதாவது:

கேகேஆர் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோற்றதால் சிஎஸ்கே அணி மனம் உடைந்துவிடாது. அந்த ஆட்டத்தில் நிறைய நேர்மறை விஷயங்கள் நடைபெற்றுள்ளன. முதல் ஆட்டத்தில் மேல்வரிசை வீரர்கள் அரிதான முறையில் தோல்வியடைந்துள்ளார்கள். அணியில் ஏராளமான அனுபவசாலிகள் உள்ளார்கள். ஒரு வலுவான அணியாக அவர்கள் மீண்டு வருவார்கள். மொயீன் அலி இனி வரும் ஆட்டங்களில் இடம்பெறுவார். ஐபிஎல் போட்டியை வெல்லக்கூடிய அளவுக்கு சிஎஸ்கே வலுவான அணியாக உள்ளது. அதனால் தான் அது ஆபத்தான அணியாக உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.