சிக்ஸரில் ரோஹித் படைத்த புதிய சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் 200 சிக்ஸர் விளாசி ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.


ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் 200 சிக்ஸர் விளாசி ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 28 பந்துகளில் 43 ரன்கள் விளாசிய மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 2 சிக்ஸரை பறக்கவிட்டார்.
இதையும் படிக்க | ராஜஸ்தான் - பஞ்சாப் ஆட்டம்: தமிழக வீரருக்கு மீண்டும் இடமில்லை!
இதில் அவர் அடித்த முதல் சிக்ஸர் மும்பை இந்தியன்ஸுக்கான 200-வது சிக்ஸர். கைரன் பொல்லார்ட் இதுவரை 257 சிக்ஸரை விளாசியுள்ளார். மும்பை இந்தியன்ஸில் அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இப்படியொரு சாதனையைப் படைக்கும் 5-வது வீரர் ரோஹித் சர்மா. ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் மற்றும் கைரன் பொலார்ட் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மும்பை அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...