முதல்முறையாக ஆர்சிபிக்கு எதிராக விளையாடும் சஹால்

சஹாலை ரூ. 6.50 கோடிக்கு ராஜஸ்தான் அணி தேர்வு செய்தபோது பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
முதல்முறையாக ஆர்சிபிக்கு எதிராக விளையாடும் சஹால்

ஐபிஎல் 2022 ஏலத்தில் சஹாலை ரூ. 6.50 கோடிக்கு ராஜஸ்தான் அணி தேர்வு செய்தபோது பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

சஹால் என்றாலே ஆர்சிபி அணி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் இந்த ஏலத்தில் சஹாலைத் தேர்வு செய்ய ஆர்சிபி விரும்பவேயில்லை. மும்பைதான் கடைசி வரைக்கும் போராடி ராஜஸ்தானிடம் தோற்றது.

2011 ஏலத்தில் சஹாலைத் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதல் இரு வருடங்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2013-ல் ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனான பிறகு ஒரு ஆட்டத்தில் சஹால் விளையாட வாய்ப்பு வழங்கினார். 

2014-ல் ஆர்சிபி அணிக்கு ரூ. 10 லட்சத்துக்குத் தேர்வானார் சஹால். 4 வருடங்களுக்கு அதே சம்பளம் தான். 2018 ஏலத்தில் ரைட் டூ மேட்ச் கார்ட் முறையைப் பயன்படுத்தி ரூ. 6 கோடிக்கு சஹாலைத் தேர்வு செய்தது ஆர்சிபி. 2014 முதல் ஆர்சிபி அணிக்காக ஒவ்வொரு வருடமும் குறைந்தது 13 ஆட்டங்களாவது விளையாடி விடுவார். 2015-ல் அதிகபட்சமாக 23 விக்கெட்டுகளை எடுத்தார். 

ஆர்சிபி அணிக்காக 8 வருடங்களில் 113 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் சஹால். ஆனால் இந்த வருடம் ராஜஸ்தான் அணிக்குத் தேர்வானதால் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட வேண்டிய சூழல். 

இன்று மும்பையில் ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகளுக்கிடையே ஆட்டம் நடைபெறுகிறது. 113 ஆட்டங்களுக்கு ஒன்றாக விளையாடிய, தனக்கு அடையாளம் தந்த ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடவுள்ளார் சஹால். அதனால் இன்றைய ஆட்டத்தில் சஹாலின் பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். 

அதுசரி, கோலி vs சஹால் போட்டி இன்று எப்படி இருக்கப் போகிறது? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com