விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு அபராதம்!

ஐபிஎல் விதியை மீறியதற்காக பெங்களூரு அணியின் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு அபராதம்!
படம் | ஐபிஎல்

ஐபிஎல் விதியை மீறியதற்காக பெங்களூரு அணியின் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு அபராதம்!
அச்சமின்றி விளையாட ஊக்கமளிக்கும் ஆஷிஷ் நெஹ்ரா: சாய் கிஷோர்

இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்த விதம் மாபெரும் பேசுபொருளானது. ஹர்சித் ராணா வீசிய ஃபுல் டாஸ் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். இடுப்புக்கு மேல் பந்து சென்றபோதிலும், விராட் கோலி க்ரீசை விட்டு வெளியே வந்து பந்தை அடித்ததால் அவருக்கு நடுவர்கள் அவுட் கொடுத்தனர். இதனால், விராட் கோலி கடும் அதிருப்தியடைந்தார். நடுவர்களுடன் விவதாத்தில் ஈடுபட்டு பின்னர் பெவிலியன் திரும்பினார். அதிருப்தியில் பெவிலியன் திரும்பும் வழியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியை தனது கையுறைகளால் (க்ளௌஸ்) தாக்கினார்.

விராட் கோலி
விராட் கோலி படம் | ஐபிஎல்

இந்த நிலையில், ஐபிஎல் விதிமுறையை மீறி நடுவர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவருக்கு போட்டிக்கான சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு அபராதம்!
விராட் கோலியின் ஆட்டமிழப்பு குறித்து ஆர்சிபி கேப்டன் கூறியதென்ன?

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டாடா ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் (36-வது போட்டி) பெங்களூரு வீரர் விராட் கோலி ஐபிஎல் விதிமுறையை மீறியதற்காக அவருக்கான போட்டிக்கான சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் விதிமுறையில் படிநிலை 1-ன் கீழ் விதி 2.8-ன் படி நடுவரின் தீர்ப்பே இறுதியானது. நேற்றையப் போட்டியில் இந்த விதிமுறையை மீறியதற்காக விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு அபராதம்!
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்றார் குகேஷ்

விதிமீறலை ஒப்புக்கொண்டு அபராதத்தை செலுத்த விராட் கோலி சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com