பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!
படம் | ஐபிஎல்

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!
ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

இரு அணிகளுக்கும் இடையிலான நேற்றையப் போட்டியின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளார். அதன் காரணமாக அவருக்கு ஒரு போட்டியின் 100 சதவிகித சம்பளத்தை அபராதமாக விதித்தும், ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தும் ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

படம் | ஐபிஎல்

தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அபிஷேக் போரெலின் விக்கெட்டினை வீழ்த்திய ஹர்ஷித் ராணா அவருக்கு முன்பாக பறக்கும் முத்தமிடுவது போல செய்கை காட்டினார். பெவிலியன் செல்லும் திசையை சுட்டிக்காட்டி அவர் மீண்டுமொரு பறக்கும் முத்தத்தை கொடுக்க முயற்சித்தார். அதேபோல ராஷிக் சலாம் பேட் செய்யும்போது, பேடின் மேலே ஸ்டம்புகள் மீது படாமல் செல்லும் பந்துக்கு அதிகப்படியாக நடுவர்களிடம் விக்கெட் கொடுக்கக் கோரி அவர் முறையிட்டார்.

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎல் நடத்தை விதிமுறையில் படிநிலை ஒன்றின் கீழ் விதி 2.5-ஐ ராணா மீறியுள்ளார். அவர் தனது விதிமீறலை ஒப்புக் கொண்டு அதற்கான அபாராதத் தொகையை கட்ட சம்மதித்துள்ளார். படிநிலை ஒன்றில் வீரர் ஒருவர் விதிமீறலில் ஈடுபட்டால், நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வாலை ஆட்டமிழக்கச் செய்தபோதும், இதே விதிமீறலில் ஈடுபட்ட ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வருகிற மே 3 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாட ஹர்ஷித் ராணாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!
கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

கொல்கத்தா அணிக்காக சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரும் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஹர்ஷித் ராணாவும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இவர்கள் மூவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com