
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 219 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்ததாக ஜோடொ சேர்ந்து ஆடிய நேஹல் வதேரா, ஸ்ரேயாஷ் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
நேஹல் வதேரா உடன் ஷஷாங் சிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
அஸ்மதுல்லா ஓமர்சாய் இறுதியில் 9 பந்துகளில் 21 ரன்கள் அடித்து 200க்கும் அதிகமான ரன்கள் குவிக்க உதவினார்.
ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே 2, ரியான் பராக், மபாகா, ஆகாஷ் மெத்வல் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
பஞ்சாப் ஸ்கோர் கார்டு
பிரியாஷ்ன்ஸ் ஆர்யா - 9
பிரப்சிம்ரன் சிங் - 21
மிட்செல் ஓவன் - 0
ஷ்ரேயாஸ் ஐயர் - 30
நேஹல் வதேரா - 70
ஷஷாங்க் சிங் - 59*
அஸ்மதுல்லா ஓமர்சாய் - 21*
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.