28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிளே ஆஃபில் மும்பை; வெளியேறியது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ûஸ புதன்கிழமை வீழ்த்தியது.

News image
- Rajanish Kakade
Updated On :21 மே 2025, 8:58 pm

DIN

ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ûஸ புதன்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை, கடைசி அணியாக பிளே ஆஃபில் நுழைந்தது. டெல்லி வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் சேர்க்க, டெல்லி 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 5, வில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

4-ஆவது பேட்டராக சூர்யகுமார் களம் புகுந்து விளாச, தொடக்க வீரர் ரயான் ரிக்கெல்டன் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களுக்கு முடித்துக் கொண்டார். அடுத்து திலக் வர்மா பேட் செய்ய வர, அவருடனான சூர்யகுமாரின் 4-ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 55 ரன்கள் கிடைத்தது.

திலக் வர்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 6-ஆவதாக வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். கடைசியில் நமன் திர் சற்று அதிரடி காட்டினார்.

ஓவர்கள் முடிவில் சூர்யகுமார் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 73, நமன் திர் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பெளலிங்கில் முகேஷ் குமார் 2, துஷ்மந்தா சமீரா, முஸ்டாஃபிஸுர் ரஹ்மான், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 181 ரன்களை நோக்கி விளையாடிய டெல்லி அணியில் சமீர் ரிஸ்வி 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருக்க, விப்ராஜ் நிகம் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20, ஆசுதோஷ் சர்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்தனர்.

கே.எல்.ராகுல் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுக்கு வீழ, கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 6, அபிஷேக் பொரெல் 6, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2, மாதவ் திவாரி 3, குல்தீப் யாதவ் 7, முஸ்டாஃபிஸுர் ரஹ்மான் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனர்.

மும்பை பெüலிங்கில் மிட்செல் சேன்ட்னர், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா 3, டிரென்ட் போல்ட், தீபக் சஹர், வில் ஜாக்ஸ், கரன் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.