குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆடவர் ஹாக்கி போட்டியை நேரலையாகப் பார்த்த பிரதமர் மோடி

இந்திய - பெல்ஜியம் ஆடவர் ஹாக்கி அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நேரலையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

News image
ஆடவர் ஹாக்கி போட்டியை நேரலையாகப் பார்த்த பிரதமர் மோடி
Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:30 am

DIN

இந்திய - பெல்ஜியம் ஆடவர் ஹாக்கி அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நேரலையாகப் பார்த்தார்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்குள்ளான டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய - பெல்ஜியம் அணிகள் மோதின. 

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய - பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டியை, நாட்டு மக்களைப் போலவே, பிரதமர் நரேந்திர மோடியும் தொலைக்காட்சி வாயிலாக நேரலையாகப் பார்த்தார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்களுக்கு சுட்டுரை வாயிலாக தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இந்திய - பெல்ஜியம் ஆடவர் ஹாக்கி அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா 2 - 5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் போராடி தோல்வியடைந்தது.

இந்திய வீரர்கள் ஹர்மன்ப்ரீத் சிங் (7வது நிமிடம்), மந்தீப் சிங் (8வது நிமிடம்) கோல் அடித்தனர்.  பெல்ஜியம் அணி வீரர் அலெக்ஸாண்டர் (19, 49, 53வது நிமிடங்களில்) 3 கோல்களை அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். அவருடன், லோயிக் (2வது நிமிடம்), ஜான்-ஜான் டோஹ்மென் (60வது நிமிடம்) தலா ஒரு கோல்களை அடித்து அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணி 5 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற வழிகோலினர்.

ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதவுள்ளது.

இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆஸ்திரேலியா - ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடையும் அணியுடன், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.

41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றும், அரையிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் கனவு நிறைவேறாமலேயே போனது. எனினும், ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.