கை விரலில் காயம் அடைந்த துவக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் தவான் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தூரில் நடைபெறுகிற 3-வது டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக கம்பீர் விளையாடும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் ட்ரென்ட் பவுல்ட் வீசிய பந்து தவானின் கையை பதம் பார்த்தது. மருத்துவ பரிசோதனையில் கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. மருத்துவர்கள் அவர் 15 நாள்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். எனவே அவர் கான்பூரில் வரும் சனிக்கிழமை துவங்க உள்ள மூன்றாவது போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தவானுக்குப் பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்தூரில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில், தொடக்க வீரர்களாக விஜய்யும் கம்பீரும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இரண்டு வருடங்கள் கழித்து இந்திய டெஸ்ட் அணியில் கம்பீர் மீண்டும் இடம்பெற உள்ளார்.
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோனியால் உத்வேகம், 15 ஆண்டு வலி மிகுந்த காத்திருப்பு... மனம் திறந்த 33 வயதான அறிமுக வீரர்!
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


