45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மலேசிய ஓபன் பாட்மிண்டன்: சிந்து, சாய்னா அதிர்ச்சித் தோல்வி

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 7:21 pm

DIN

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
மலேசியாவின் குச்சிங் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-18, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யூஃபெயிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். சென் யூஃபெய் 1 மணி, 8 நிமிடங்களில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த சிந்துவை வீழ்த்தினார். மற்றொரு முதல் சுற்றில் சாய்னா நெவால் 21-19, 13-21, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுசியிடம் தோல்வியடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-11, 21-8 என்ற நேர் செட்களில் சீனாவின் கியாவ் பின்னை வீழ்த்தினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி தங்களின் முதல் சுற்றில் 21-18, 18-21, 17-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லியாவ் குவான் ஹாவ்-லூ சியா பின் ஜோடியிடம் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.