மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பயிற்சியாளர் தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வானதாக வெளியான செய்திகளுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. பயிற்சியாளருக்கான நேர்காணல் மும்பையில் நேற்று நிறைவடைந்தது.

News image
Updated On :11 ஜூலை 2017, 3:06 pm

எழில்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வானதாக வெளியான செய்திகளுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

பயிற்சியாளருக்கான நேர்காணல் மும்பையில் நேற்று நிறைவடைந்தது. ஆனால் பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு உடனடியாக அறிவிக்கப்படவில்லை. பயிற்சியாளரை தேர்வு செய்ய சில நாள்கள் காலஅவகாசம் தேவைப்படுவதாக பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி தெரிவித்தது.

மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நேர்காணலை சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி நடத்தியது. சச்சின் லண்டனில் இருப்பதால் ஸ்கைப் மூலம் பங்கேற்றார். ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பிபஸ், லால்சந்த் ராஜ்புட் ஆகியோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இவர்களில் சேவாக் மட்டுமே நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டார்.

நேர்காணலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி கூறியதாவது: ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பிபஸ், லால்சந்த் ராஜ்புட் ஆகிய 5 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளின் பில் சிம்மன்ஸ் நேர்காணலில் தன்னால் பங்கேற்க இயலாது என தெரிவித்துவிட்டார். பயிற்சியாளரை இறுதி செய்ய எங்களுக்கு சில நாள்கள் காலஅவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை ஒத்திவைத்துள்ளோம். இலங்கை டெஸ்ட் தொடருக்கு ஓரளவு காலஅவகாசம் இருப்பதால், பயிற்சியாளரை அறிவிப்பதில் அவசரம் தேவையில்லை என கருதுகிறோம். புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் 2019 உலகக் கோப்பை போட்டி வரையில் அந்தப் பதவியில் இருப்பார். பயிற்சியாளர் விஷயத்தைப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட்டின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்றார்.

கோலி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கங்குலி, 'பயிற்சியாளர் அணியை எப்படி இயக்குகிறார் என்பதை இந்திய கேப்டன் விராட் கோலி புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் பயிற்சியாளர் தேர்வு விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கியிருக்கும் விராட் கோலியை பாராட்டியாக வேண்டும். அவர், மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து நாடு திரும்பிய பிறகு அவரிடம் பயிற்சியாளர் விஷயம் குறித்து பேசவிருக்கிறோம். அதேநேரத்தில் இந்திய அணி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அதில் விராட் கோலி முக்கிய நபராக இருப்பார்' என்றார்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்திய பயிற்சியாளராக இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்று பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி அறிவித்துள்ளார். ரவி சாஸ்திரி தேர்வானதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.