மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய அணி அடுத்த மேலாளர் யார்? பிசிசிஐ நாளை தேர்வு...!

இந்திய கிரிக்கெட் அணிக்கான அடுத்த மேலாளரை தேர்வு செய்யும் விதமாக 13 பேரிடம் நேர்காணல் நடத்தியது பிசிசிஐ.

News image
Updated On :25 ஜூலை 2017, 2:30 pm

DIN

இந்திய கிரிக்கெட் அணிக்கான மேலாளர் காலிப் பணியிடம் தொடர்பாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து அந்தப் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வழங்க ஜூலை 21-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பதவிக்காக 35 பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். இதிலிருந்து சுமார் 13 பேர் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்நிலையில், அந்த 13 பேருக்கும் செவ்வாய்கிழமை நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணல் பிசிசிஐ தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா தலைமையில் நடத்தப்பட்டது. இதிலிருந்து 5 பேரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

இந்த 5 பேரின் விவரங்களும் பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் சௌத்ரி மற்றும் பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய்க்கும் அனுப்பப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் புது மேலாளர் புதன்கிழமை தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.