ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடிக்கமுடியுமா?: பாண்டியா பதில்!
யுவ்ராஜ் சிங்குக்குப் பிறகு ஆறு பந்துகளில் சிக்ஸர் அடிக்கக்கூடியவர் என்று உங்களைச் சொல்லலாம். அதைப் பற்றி...


இலங்கை காலே நகரில் கடந்த வாரம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் போட்டியிட்டன. இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா அறிமுக வீரராக களமிறங்கினார்.
இந்நிலையில், பிசிசிஐ இணையத்தளத்துக்காக ஹார்திக் பாண்டியாவை புஜாரா பேட்டி கண்டார். அப்போது புஜாரா கேட்ட கேள்விகளுக்கு பாண்டியா அளித்த பதில்கள்.
புஜாரா: யுவ்ராஜ் சிங்குக்குப் பிறகு ஆறு பந்துகளில் சிக்ஸர் அடிக்கக்கூடியவர் என்று உங்களைச் சொல்லலாம். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பாண்டியா: ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடிப்பது குறித்து நான் யோசிக்கமாட்டேன். அணிக்கு என்ன தேவையோ அதைப் பற்றியே சிந்திப்பேன்.
புஜாரா: பிடித்த ஆல்ரவுண்டர்:
பாண்டியா: பலமுறை சொல்லியிருக்கிறேன். ஜாக் காலிஸ். தென் ஆப்பிரிக்க அணிக்காக அவர் செய்தவை எல்லாம் ஆச்சர்யமானவை.
புஜாரா: கிரிக்கெட் தவிர வேறென்ன பிடிக்கும்?
பாண்டியா: கார்களும் பாப் கார்ன்களும் பிடிக்கும். சீஸ் பாப்கார்னுக்காகவே நான் படங்கள் பார்ப்பேன். ஏனெனில் அவற்றை வேறெங்கும் வாங்கமுடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...