திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

டெஸ்ட்: முரளி விஜய் அரை சதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முரளி விஜய் அரை சதம் எடுத்துள்ளார். 

News image
Updated On :18 மார்ச் 2017, 5:01 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முரளி விஜய் அரை சதம் எடுத்துள்ளார். 

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 137.3 ஓவர்களில் 451 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 361 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 178 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 185 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 40 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 42, புஜாரா 10 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடர்ந்தபோது மிகவும் கவனமாக ஆடிய முரளி விஜய் அரை சதம் எடுத்தார். 129 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் அவர் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்திய அணி 52 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 50, புஜாரா 19 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.