எல். பாலாஜிக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய பிசிசிஐ!
எட்டு டெஸ்டுகள், 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாலாஜிக்கு ரூ. 50 லட்சத்தை வழங்கியுள்ளது..


இந்திய அணிக்காக விளையாடிய லட்சுமிபதி பாலாஜிக்கு பிசிசிஐ ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளது.
இந்திய அணிக்காக 2003- 04ஆம் ஆண்டுக்கு முன்பு விளையாடத் தொடங்கிய முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ நிதியுதவி செய்துவருகிறது. பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசனால் 2012-ல் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. குறைந்தபட்சம் 10 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் வீரர்களுக்கு இத்திட்டத்தால் பலன் கிடைக்கும். இதையடுத்து எட்டு டெஸ்டுகள், 30 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பாலாஜிக்கு ரூ. 50 லட்சத்தை வழங்கியுள்ளது பிசிசிஐ.
என் கோரிக்கையை பிசிசிஐக்கு அனுப்பிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி. கோரிக்கை வைத்த ஒரு மாதத்துக்குள் எனக்குப் பணம் கிடைத்துவிட்டது என்று பாலாஜி கூறியுள்ளார். பாலாஜி, தமிழ்நாடு ரஞ்சி அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தற்போது பணியாற்றி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...