தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ரஞ்சியில் பங்கேற்கவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்தவும் புதுச்சேரிக்கு வாய்ப்பு!

இந்தப் புதிய வாய்ப்பால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் புதுச்சேரிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்... 

News image
Updated On :28 அக்டோபர் 2017, 8:47 am

எழில்

புதுச்சேரி கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தி.

அடுத்த வருட ரஞ்சி போட்டியில் புதுச்சேரியும் பங்குபெறவுள்ளது.

ஆம். புதுச்சேரி கிரிக்கெட் அணிக்கு அசோசியேட் உறுப்பினர் பதவியை அளித்துள்ளது பிசிசிஐ. இதை பிசிசிஐ நிர்வாகக் குழுவும் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து அடுத்த வருட ரஞ்சி போட்டியில் பங்குபெறும் தகுதியை புதுச்சேரி அடைந்துள்ளது.

சிஏபி எனப்படும் புதுச்சேரி கிரிக்கெட் சங்கம், கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்யவும் அதிகாரபூர்வ அமைப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்தப் புதிய வாய்ப்பால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் புதுச்சேரிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதனால் சர்வதேசத் தரத்துடனான ஒரு புதிய கிரிக்கெட் மைதானத்தை புதுச்சேரியில் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.