விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விவரங்கள்!

சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை...

News image
Updated On :7 செப்டம்பர் 2017, 12:33 pm

எழில்

இலங்கைச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான தொடரின் 5 ஒருநாள் ஆட்டங்கள் சென்னை, கொல்கத்தா, இந்தூர், பெங்களூரு, நாகபுரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. டி20 ஆட்டங்கள் மூன்றும் ஹைதராபாத், ராஞ்சி, குவாஹாட்டியில் நடைபெறும்.

செப்டம்பர் 17 அன்று சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. செப்டம்பர் 21 அன்று கொல்கத்தாவிலும் செப்டம்பர் 24 அன்று இந்தூரிலும் செப்டம்பர் 28 அன்று பெங்களூரிலும் அக்டோபர் 1 அன்று நாகபுரியிலும் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்பின்னர் அக்டோபர் 7-ல் ராஞ்சியிலும் அக்டோபர் 10-ல் குவாஹாட்டியிலும் அக்டோபர் 13-ல் ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 10-ம் தேதி தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1,200. மேலும் புக்மைஷோ இணையத்தளம் வழியாகவும் டிக்கெட்டுகளைப் பெறமுடியும்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.