சென்னை ஒருநாள் போட்டியில் ஆரோன் ஃபிஞ்ச் பங்கேற்பது சந்தேகம்!
காயம் காரணமாக ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் பங்கேற்பது சந்தேகம் என்று அறியப்படுகிறது.


இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் பங்கேற்பது சந்தேகம் என்று அறியப்படுகிறது.
இங்கிலாந்தில் கவுண்டி போட்டியில் விளையாடியபோது ஃபிஞ்சுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அதன்பிறகு வலைப்பயிற்சியின்போது அவருக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இக்காயத்தின் தன்மையில் பெரிதளவு முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் ஆரோன் ஃபிஞ்ச் பங்கேற்க மாட்டார் என்று அறியப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிஞ்ச் அணியில் இடம்பெறாத பட்சத்தில் அவருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...