/

ஜப்பான் ஓபன்: காலிறுதியில் இரு இந்திய வீரர்கள்!

ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்...

News image
Updated On :21 செப்டம்பர் 2017, 6:54 am

எழில்

ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஆடவர் இரண்டாவது சுற்றில் யுன் ஹு-வை எதிர்கொண்டார் ஸ்ரீகாந்த். இதில், 21-12, 21-11 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

அதேபோல மற்றொரு இரண்டாவது சுற்றில் ஜென் ஹோ-வை எதிர்கொண்டார் இந்தியாவின் பிரனாய். இதில், 21-16, 23-21 என்ற நேர் செட்களில் பிரனாய் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.