காமன்வெல்த்: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெள்ளி வென்ற இந்திய வீராங்கனைகள்!
தேஜஸ்வினி வெல்லும் 7-வது காமன்வெல்த் பதக்கமாகும் இது. 2006 முதல் அவர் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை...


கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 25 மீ. ரேபிட் ஃபயர் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்றுள்ளார். இதையடுத்து காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அனிஷ் பன்வாலா ஹரியானாவைச் சேர்ந்தவர். முன்னாள் வீரர் ஜஸ்பால் ரானா இவருடைய பயிற்சியாளர்.
துப்பாக்கி சுடுதலில் ஏற்கெனவே இந்தியா தனது முத்திரையை பதித்துள்ள நிலையில் வியாழக்கிழமை மகளிர் 50 மீ ரைபிள் ப்ரோன் பிரிவில் தேஜஸ்வினி வெள்ளிப் பதக்கம் வென்றார். இளம் வீராங்கனை அஞ்சும் மொட்கில் 16-வது இடத்தையே பெற முடிந்தது.

அஞ்சும் மொட்கில்
இந்நிலையில் இருவருமே இன்று பதக்கம் பெற்று இந்தியாவுக்கு மேலும் பெருமை தேடித்தந்துள்ளார்கள். 50 மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் 457.9 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் 37 வயது தேஜஸ்வினி. அஞ்சும் 544.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்று இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கத்தை தேஜஸ்வினியுடன் இணைந்து நிலைநாட்டியுள்ளார்.
தேஜஸ்வினி வெல்லும் 7-வது காமன்வெல்த் பதக்கமாகும் இது. 2006 முதல் அவர் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை காமன்வெல்த் போட்டியில் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...