இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் சந்திப்பு!

கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாம் இடம் பெற்றது... 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:56 am

எழில்

கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாம் இடம் பெற்றது. 

பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கு காமன்வெல்த் முக்கியத்துவம் அளித்துவருகிறது. 53 நாடுகளே உறுப்பினர்களாக இருந்தாலும், 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். காமன்வெல்த் நாடுகளிடையே நெருக்கம், தோழமை ஏற்படும் வகையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று அழைக்கப்படும் இப்போட்டிகளில் முதல் போட்டிகள் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கியது.

கடந்த 4-ம் தேதி கோல்ட்கோல்ஸ்ட் காமன்வெல்த் போட்டி வண்ணமயமாகத் தொடங்கி 12 நாள்களாக நடைபெற்றது. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றனர். 26 தங்கம் உள்பட மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றது. ஆஸ்திரேலியா முதலிடத்தையும் இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும் பிடித்தன. 

இந்தமுறை பளு தூக்குதலில் 9, துப்பாக்கி சுடுதலில் 16, டேபிள் டென்னிஸில் 8, பாட்மிண்டனில் 6, தடகளத்தில் 3, மல்யுத்தத்தில் 12, குத்துச்சண்டையில் 9, ஸ்குவாஷில் 2, பவர்லிப்டிங்கில் 1 என மொத்தம் 66 பதக்கங்களை இந்தியா வென்றது. இந்திய வீரர்களுக்குக் கிட்டத்தட்ட இணையாக சாதித்துள்ளார்கள் இந்திய வீராங்கனைகள். இந்திய அணி வென்ற 26 தங்கங்களில் 13-ஐ ஆண்களும் 12-ஐ பெண்களும் பெற்றுள்ளார்கள். வெள்ளிப் பதக்கங்களில் ஆண்கள் 9 பெற்றார்கள். வீராங்கனைகள் ஒன்று அதிகமாக 10 வெள்ளிப் பதக்கம் பெற்று இந்திய அணிக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவர்களை இன்று சந்தித்தார் பிரதமர் மோடி. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் பங்கேற்றார். பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.