உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி காலிறுதிக்கு இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சத்விக் இணை, ஒற்றையர் பிரிவில் சிந்து, சாய்னா, சாய் பிரணீத் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
சீனாவின் நான்ஜிங் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வியாழக்கிழமை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-16, 21-19 என்ற நேர் செட்களில் முன்னாள் சாம்பியன் தாய்லாந்து ரட்சினோக் இந்தனானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அவர் காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயினின் கரோலினா மரினை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-10, 21-18 என்ற நேர் செட்களில் தென்கொரியாவின் சுங் ஜி ஹியுனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் ஜப்பானின் நவோமி ஒஹுராவை எதிர்கொள்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரணீத் 21-13, 21-11 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் விட்டிங்கஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதே நேரத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் 18-21, 18-21 என நேர் செட்களில் மலேசியாவின் டேரன் லியுவிடம் தோல்வியுற்று வெளியேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சத்விக் ரங்கிரெட்டி இணை 20-22, 21-14, 21-6 என்ற செட் கணக்கில் 7-ஆம் நிலை இணையான மலேசியாவின் ஜோ சூன் ஹுவாட்-ஷெவன் ஜெமியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா: மாநிலங்களவையில் அறிமுகம்

சகோதரரை தாக்கிய விவகாரம்: அமைச்சா் மரிய வில்சன் சமரச தீா்வு மையத்தில் ஆஜா்

குதிரை பேர வழக்கு: இருவருக்கு நிபந்தனை பிணை

வண்ணாா்பேட்டையில் கட்டடத்திற்கு சீல்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



