ஓய்வுக்கு முன்பு விளையாடும் கடைசி ஆட்டத்தில் சதமடித்துள்ள கெளதம் கம்பீர்!
தனது கடைசி ஆட்டமாக தில்லியில் நடைபெற்று வரும் ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் அவர் விளையாடி வருகிறார்....


இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாகச் சமீபத்தில் அறிவித்தார்.
இந்தியாவின் தலைசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கம்பீர் கடந்த 2004 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். 9 சதம், 22 அரை சதத்துடன் 4199 ரன்களையும், ஒருநாள் ஆட்டங்களில் 2003 முதல் 2013 வரை ஆடி 11 சதம், 34 அரை சதங்களுடன் மொத்தம் 5238 ரன்களை குவித்தார். குறிப்பாக 2011 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இந்நிலையில் தனது கடைசி ஆட்டமாக தில்லியில் நடைபெற்று வரும் ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் அவர் விளையாடி வருகிறார். முதலில் விளையாடிய ஆந்திர அணி 390 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு தில்லி அணி விளையாடி வருகிறது. 80 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தனது கடைசி ஆட்டத்தை விளையாடி வரும் கெளதம் கம்பீர், சதமடித்து முத்திரை பதித்துள்ளார். 185 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். முதல்தர ஆட்டத்தில் இது அவருடைய 43-வது சதமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...