காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கடந்த ஐபிஎல்-லில் சரியாக விளையாடாதது ஏன்?: யுவ்ராஜ் சிங் விளக்கம்

கடந்த சீசன் எனக்கு நல்லவிதமாக அமையவில்லை. ஒப்புக்கொள்கிறேன்... 

News image
Updated On :21 டிசம்பர் 2018, 6:44 am

எழில்

2014-ம் வருடம் ரூ. 14 கோடிக்கும் அடுத்த வருடம் ரூ. 16 கோடிக்கும் தேர்வான யுவ்ராஜ் சிங் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு மட்டுமே மும்பை அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

ஐபிஎல் ஏலம் குறித்து யுவ்ராஜ் சிங் ஒரு பேட்டியில் கூறியதாவது:

சாதிக்கவேண்டும் என்கிற வெறி இன்னும் உள்ளது. சும்மா விளையாடவேண்டும் என்பதற்காக ஐபிஎல்-லில் நான் விளையாடப்போவதில்லை. விளையாட்டின் மீது இன்னும் காதல் இருப்பதால்தான் தொடர்ந்து விளையாடுகிறேன். இந்த சீசனில் நான் நன்றாக விளையாடுவேன் என நினைக்கிறேன். 

ஐபிஎல் அணித் தேர்வில் இளைஞர்களை எடுக்கவே விரும்புவார்கள். நான் என் கிரிக்கெட் வாழ்வின் கடைசிப் பகுதியில் உள்ளேன். ஏலத்தில் முதலில் என்னை யாரும் தேர்வு செய்யவில்லையென்றாலும் கடைசியில் யாராவது என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என எண்ணினேன். 

நான் மும்பை அணிக்குச் செல்வேன் என என்னுடைய உள்ளுணர்வு சொல்லியது. இந்த வருடம் விளையாட ஒரு வாய்ப்பை எதிர்பார்த்தேன். அது கிடைத்துள்ளது. ஆகாஷ் அம்பானி என்னைப் பற்றி நன்கு சொல்லியிருக்கிறார். அது தன்னம்பிகையை அளித்துள்ளது. 

ஜாகீர் கான், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா போன்றோர் உள்ள சூழல் எனக்கானது. அவர்களுடன் சேர்ந்து நிறைய கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். உங்களுக்கு ஆதரவு இருக்கும்போது, அது உங்களுடைய ஆட்டத்திறனை வளர்க்கும். 

கடந்த சீசன் எனக்கு நல்லவிதமாக அமையவில்லை. ஒப்புக்கொள்கிறேன். நான்கைந்து ஆட்டங்களில் பல்வேறு நிலைகளில் ஆடியுள்ளேன். ஒரே நிலையுடன் ஆட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. இந்தமுறை கிடைக்கவுள்ள வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.