ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஜூனியர் உலகக் கோப்பை: அனைத்து ஆட்டங்களிலும் எதிரணிகளை ஆல் அவுட் ஆக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்!

திராவிட் பயிற்சியின் கீழான இந்திய அணி இப்போட்டியில் தோல்வியே இன்றி முன்னேறி வந்துள்ளது...

News image

ஷிவம் மாவி

Updated On :3 பிப்ரவரி 2018, 8:03 am

எழில்

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 47.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெர்லோ அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் இஷான் போரெல், ஷிவா சிங், நாகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்திய அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களில் இலக்கை எட்டியது. கல்ரா 101, தேசாய் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

திராவிட் பயிற்சியின் கீழான இந்திய அணி இப்போட்டியில் தோல்வியே இன்றி முன்னேறி வந்துள்ளது. அதிலும், இந்த ஆட்டம் உள்பட இதுவரை ஆடிய 6 ஆட்டங்களிலும் எதிரணியை ஆல் அவுட் செய்துள்ளது. வேகப்பந்துவீச்சில் நாகர்கோடி, ஷிவம் மாவி, இஷான் போரெல் ஆகியோரும் சுழற்பந்துவீச்சில் அனுகுல் ராய், அபிஷேக் சர்மா, ஷிவா சிங் ஆகியோரும் எதிரணிகளுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கியுள்ளார்கள். அனுகுல் ராய் 14 விக்கெட்டுகளுடன் இந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் கனடாவின் ஃபைசல், ஆப்கானிஸ்தானின் குவாயிஸ் அகமத் ஆகியோருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.

நாகர்கோடி

நாகர்கோடி

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியினர் எடுத்த விக்கெட்டுகள்

அனுகுல் ராய் - 14 விக்கெட்டுகள்
நாகர்கோடி - 9 விக்கெட்டுகள்
ஷிவம் மாவி - 9 விக்கெட்டுகள்
இஷான் போரெல் - 6 விக்கெட்டுகள்
அபிஷேக் சர்மா -  6 விக்கெட்டுகள்

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய எதிரணிகளின் ஸ்கோர்கள்

ஆஸ்திரேலியா 216 ரன்கள்
பாகிஸ்தான் - 69 ரன்கள்
வங்கதேசம் - 134 ரன்கள்
ஜிம்பாப்வே - 154 ரன்கள்
பப்புவா நியூ கினியா - 64 ரன்கள்
ஆஸ்திரேலியா - 228 ரன்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.