மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெளிநாடுகளில் சிறப்பாகப் பந்துவீசியும் குறைவான வாய்ப்புகள் பெறும் புவனேஸ்வர் குமார்!

எனினும் ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் அதிக டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்கள்...

News image
Updated On :13 ஜனவரி 2018, 11:24 am

எழில்

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் இன்று தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியை 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் எதிர்கொள்கிறது. டந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியா, முதல் டெஸ்டில் தோற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக சஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேல் அணியில் இடம்பெற்றுள்ளார். தவனுக்குப் பதிலாக ராகுலும் புவனேஸ்வருக்குப் பதிலாக இஷாந்த் சர்மாவும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் ரோஹித் சர்மா அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

புவனேஸ்வர் குமார் கடைசியாக விளையாடிய இரு டெஸ்டுகளிலும் பிரமாதமாகப் பங்களிப்பு செய்துள்ளார். கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்டுகளும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளும் எடுத்தார். எனினும் அவருக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர் குமார், சஹா நீக்கம் கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. சமூகவலைத்தளங்களில் கோலியின் முடிவுகளுக்கு எதிராகப் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். கிரிக்கெட் நிபுணர்களுக்கும் கோலியின் விந்தையான இந்த முடிவுகள் வியப்பை அளித்துள்ளன.

Story image

வெளிநாடுகளில் இவர்கள் (ஜூன் 2014 முதல்)

ஷமி - பெளலிங் சராசரி - 32.48, 1 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இஷாந்த் சர்மா - பெளலிங் சராசரி - 31.90, 2 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
உமேஷ் யாதவ் - பெளலிங் சராசரி - 43.51, ஒருமுறை கூட 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை.
புவனேஸ்வர் குமார் - பெளலிங் சராசரி - 26.65, 3 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

இந்த நான்கு பேரில் சிறப்பான பந்துவீச்சு, புவனேஸ்வர் குமாருடையது. ஆனால் வெளிநாடுகளில் இவர்களில் யார் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார்கள்?

ஷமி - 15 டெஸ்டுகள்
இஷாந்த் சர்மா - 15 டெஸ்டுகள்
உமேஷ் யாதவ் - 11 டெஸ்டுகள்
புவனேஸ்வர் குமார் - 9 டெஸ்டுகள்

வெளிநாடுகளில் புவனேஸ்வர் குமார் சிறப்பாகவே பந்துவீசியுள்ளார். எனினும் அவரை விடவும் ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் அதிக டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்கள் என்பது மேலும் ஆச்சர்யமளிக்கிறது. 

தன் திறமையைத் தொடர்ந்து நிரூபித்து வரும் புவனேஸ்வர் குமாருக்கு ஏன் குறைவான வாய்ப்புகள் தரப்படுகின்றன? கோலி தான் பதில் சொல்லவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.